ஹைட்ரோ கார்பன் திட்டங்களை திரும்ப பெற கோரி தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டங்களை திரும்பப் பெற்று, காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்ககோரி 5 மாவட்ட தலைநகரங்களில் 28ம் தேதி தி.மு.க.சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் , 341க்கும் மேற்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கான ஆய்வுக் கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல் அனுமதி , மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் தேவையில்லை என்று மத்திய அரசு அறிவித்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய அரசு மற்றும் மாநில அரசின் விவசாயிகள், வெகுமக்கள் விரோத செயல்களை கண்டித்து தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments