தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா - தலைமைச்செயலர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவு
தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கு விழாவை தமிழில், தேவாரம், திருவாசகம் ஓதி நடத்தக் கோரிய வழக்கில் தலைமைச்செயலர் உள்ளிட்ட துறை அதிகாரிகள் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த கோவில் தமிழர்களின் அடையாளம் என்றும், இங்கு குடமுழுக்கு விழா தமிழில் நடந்ததற்கான கல்வெட்டு சான்று இருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தலைமைச்செயலாளர், தமிழ் வளர்ச்சித்துறை செயலர், அறநிலையத்துறை ஆணையர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வரும், 27 ம் தேதிக்கு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Comments