முல்லை பெரியாறு அணையில் துணைக் கண்காணிப்பு குழு நேரில் ஆய்வு
முல்லை பெரியாறு அணையில், செய்யப்பட வேண்டிய மராமத்து பணிகள் குறித்து, துணைக் கண்காணிப்பு குழுவினர் நேரில் ஆய்வுசெய்தனர்.
முல்லை பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க உச்சநீதிமன்றம் நியமித்த மூவர் குழு, சுமார் 6 மாதங்களுக்கு பிறகு வருகிற 28ஆம் தேதி அணையில் மீண்டும் ஆய்வு செய்ய உள்ளது. இந்நிலையில், அணையின் நீர்வரத்து, நீர் வெளியேற்றம், கசிவு நீர் உள்ளிட்டவை குறித்து, துணைக் கண்காணிப்பு குழுவினர் நேரில் வந்து ஆய்வு செய்தனர்.
மெயின் அணை, பேபி அணை, கேலரிப்பகுதி, மதகுப்பகுதியிலும் ஆய்வு நடைபெறுகிறது. ஆய்வுக்கு பின்னர் அறிக்கை தயாரிக்கப்பட்டு, மூவர் குழு தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும்.
Comments