இந்திய பகுதி மீது கை வைக்க எந்த நாட்டுக்கும் துணிவு கிடையாது: அமைச்சர் ராஜ்நாத் சிங்

0 806

இந்தியப் பகுதிகள் மீது கை வைக்க எந்த நாட்டுக்கும் துணிவு கிடையாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், சீன ராணுவத்தினரால் பிரச்னைகளை சந்தித்து வருவதாக அந்நாட்டையொட்டிய எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவித்து வருவது குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், எல்லையில் பிரச்னை ஏற்பட்டால் பாதுகாப்புப் படை வீரர்கள் அதை கவனித்து கொள்வார்கள் என்றும், ஆதலால் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் கூறினார்.

ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த 10 வயது சிறார்கள் இடையேயும் தீவிரவாத கருத்துகள் பரப்பப்படுவது கவலையளிப்பதாக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்திருப்பது குறித்த கேள்விக்கு, அங்குள்ள சிறார்களும் நமது நாட்டினர்தான், அவர்களை எதிர்மறை கண்ணோட்டத்தில் காண வேண்டாம். குழந்தைகளை தவறான திசையில் வழிநடத்துபவர்கள் தான் குற்றவாளிகள். சிறார்கள் அல்ல என குறிப்பிட்டார்.

மேலும் இந்தியா மதசார்பற்ற நாடு தான் என் கூறிய அவர், ஆனால் அண்டை நாடுகள் பலவும் தங்களை குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த நாடுகள் என வெளிப்படையாக அறிவித்துள்ளன. ஏன் அமெரிக்கா கூட மதசார்பு உள்ள நாடு தான். ஆனால் இந்தியா இதுவரை மதசார்புடைய நாடாக அறிவிக்கப்படவில்லை.

அதற்கு காரணம் நாம் நாட்டில் வாழ்ந்த ஞானிகளும், மகான்களும் நம் எல்லை பகுதியில் வாழும் மக்களை மட்டும்மல்ல, உலகம் முழுவதும் வாழும் மக்களை ஒரே குடும்பமாக கருதினர் என்றார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments