சமூகவலைதளத்தில் ஆபாச கருத்துகளை பதிவிடுவோர் மீது நடவடிக்கை

0 1101

சமூக வலைதளங்களில் ஆபாசமாக கருத்துக்களை பதிவு செய்பவர்கள் மீது  நடவடிக்கை எடுக்கும்படியும், அத்தகைய கருத்து வெளியிட்டவர்களின்  பட்டியலை தாக்கல் செய்யும் படியும் சைபர் கிரைம் போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதி ஒருவருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக கருத்துகளை பதிவிட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சென்னையை சேர்ந்த மருதாசலம் என்பவர்  ஜாமீன்கோரி  தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சமூக வலைதளங்களில் ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தி கருத்து தெரிவிப்பவர்கள் மீது உரிய  நடவடிக்கையை காவல்துறை எடுக்க  வேண்டும் என உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், ஆபாசக் கருத்துக்களை வெளியிட்ட குறைந்தபட்சம் 10 பேரின் விவரங்களை இன்று மதியத்திற்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments