எம்ஜிஆரால் தான் அண்ணாவுக்கு அடையாளம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு

0 1138

எம்ஜிஆர் அருகில் இருந்ததால் தான் அண்ணா மக்களால் அடையாளம் காணப்பட்டதாகவும், எம்ஜிஆரை பார்த்து தான் அண்ணாவிற்கு மக்கள் ஓட்டு போட்டனர் என்றும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.

விருதுநகரில் நடந்த எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் எம்ஜிஆரால் தான் கருணாநிதி முதல்வரானார் என்று பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எம்ஜிஆரை கட்சியை விட்டு நீக்கிய பின்பு அவர் இறக்கும் வரையில், கருணாநிதியால் முதல்வராக முடியவில்லை என்றும் குறிப்பிட்டார்.

மேலும் பேசிய அமைச்சர் அதிமுகவினர் ஆன்மீகவாதிகள் என்றும், அதனால் தமிழகத்தில் ஆன்மீக ஆட்சி தான் நடக்கிறது என்றும் பேசினார். ஆன்மீகம் பெருகினால் நாட்டில் கலவரங்கள் குறையும் என்றார். முன்னாள் அதிமுக முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமியும் ஆன்மீக வழியில் ஆட்சி நடத்தி வருவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments