போட்டியை சந்திக்கும் நெட்பிளிக்ஸ்

0 823

டிஸ்னி பிளஸ், ஆப்பிள் டிவி ஆகியவற்றால் எற்பட்டுள்ள தொழில் போட்டி, இலவச சேனல்களின் தாக்கம் உள்ளிட்டவற்றால், நடப்பு ஆண்டு சிரமமாக இருக்கும் என பிரபல ஆன்லைன் ஒளிபரப்பு நிறுவனமான நெட்பிளிக்ஸ் (Netflix)தெரிவித்துள்ளது, நடப்பு ஆண்டின் முதல் 3 மாதங்களில் மேலும் 70 லட்சம் வாடிக்கையாளர்களை ஈர்க்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஆனால்  டிஸ்னி பிளஸ் மற்றும் ஆப்பிள் டிவி கடந்த நவம்பரில் அமெரிக்காவில் தங்களது சேவைகளைத் துவக்கின. டிஸ்னி பிளஸ், பிரிட்டன், பிரான்சு,ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளில் வரும் மார்ச் மாதம் முதல் சேவையை துவக்க உள்ளது.ஆப்பிள் டிவி ஏற்கனவே 100 க்கும் அதிகமான நாடுகளில் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

இப்போது 190 நாடுகளில் நெட்பிளிக்ஸ் தனது சேவையை அளித்து வருகிறது. அதே சமயம் பீகாக், புளூட்டோ டிவி போன்ற புதிய இலவச போட்டியாளர்களின் வருகையால், வருமானத்தை உயர்த்துவதில் அதற்கு சிக்கலும் ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments