மறைந்திருந்து புகைப்படம் எடுத்தால் சட்டப்படி நடவடிக்கை - ஹாரி தம்பதி

0 1017

தங்களை மறைந்திருந்து புகைப்படம் எடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊடகங்களுக்கு ஹாரி தம்பதி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இங்கிலாந்து அரசப் பதவிகளை துறந்து, கனடாவின் வான்கூவர் நகரில் ஹாரி தம்பதி குடியேறியுள்ளனர். இந்த நிலையில், மேகன் தனது குழந்தை ஆர்க்கியுடனும் 2 நாய்களுடனும் நடைபயிற்சி மேற்கொள்வதை புதர் மறைவில் இருந்து ஊடகங்கள் படம் பிடித்ததாக கூறப்படுகிறது.

அதே போல் ஹாரி விமானம் மூலம் கனடா வந்து இறங்கிய புகைப்படங்களும் சமூகவலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன. இதனால் எரிச்சலடைந்துள்ள ஹாரி தம்பதி, தங்களை பின்தொடர்ந்து மறைந்திருந்து புகைப்படம் எடுக்கும் ஊடகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தங்கள் வழக்கறிஞர்கள் மூலம் எச்சரித்துள்ளனர்.



SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments