கைதிகளுக்கு செல்போன் விற்ற சிறை காவலர்கள் பணியிடை நீக்கம்

0 1022

புதுச்சேரி சிறைச்சாலைக்கு செல்போன்களை கடத்தி கைதிகளுக்கு விற்றதாக சிறை வார்டன்கள் மற்றும் காவலர்கள் 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் புதுச்சேரி காவல் கட்டுப்பாடு அறைக்கு ஆளுநர் மாளிகை, ரயில் நிலையங்கள் உள்ளிட்டவைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்து பெரியகடை போலீசார் நடத்திய விசாரணையில் காலாப்பட்டு மத்திய சிறையிலிருந்து, டெல்லியை சேர்ந்த நித்திஷ்வர்மா(33) அந்த மிரட்டலை விடுத்தது தெரியவந்தது.

இதனையடுத்து, சிறைச்சாலையின் வார்டன்கள் மற்றும் காவலர்கள் சபரி, சங்கர், சீனு, ராமகிருஷ்ணன்,குருநாதன்,சேகர்,சுரேஷ் உள்ளிட்ட 7 பேரை சிறைத்துறை ஐஜி பங்கஜ்குமார் ஜா பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments