கரோனா வைரஸ்: சீனாவில் 9 பேர் பலி மேலும் 5 நாடுகளுக்கும் பரவியது

0 1443

சீனாவில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மேலும் 2 பேர் பலியானதால், பலி எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், சீனாவிலிருந்து அந்த வைரஸ் அமெரிக்கா, தைவான் உள்ளிட்ட மேலும் 5 நாடுகளுக்கு பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் உஹான் ((Wuhan )) பகுதியில் கரோனா எனும் புதிய வைரஸ் பரவியிருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வைரசால் பாதிக்கப்பட்டோர் மருத்துவமனைகளில் தனிமை படுத்தப்பட்ட அறையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சீனாவை சேர்ந்த 66 வயது முதியவர் ஒருவரும், 48 வயது பெண் ஒருவரும் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இதையடுத்து சீனாவில் அந்த வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது.

இதேபோல், உஹான், பீஜிங், ஷாங்காய், ஹெனான், தியான்ஜின், ஜேஜியாங் ஆகிய பகுதிகளிலும் கரானா வைரஸால் பலர் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் அப்பகுதிகளில் 400 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.

வைரசை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி மீது பரவலாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து, சவாலாக எடுத்துக் கொண்டு சீன அரசு நடவடிக்கையை தொடங்கியுள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட உஹான் பகுதிக்கு பயணம் செல்ல மக்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளதுடன், வைரஸ் பாதிப்பை மறைக்கக் கூடாது என பொதுமக்களுக்கு சீன அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments