சுற்றுலா வந்த வெளிநாட்டவர்களை தீவிரவாதிகள் என தவறான செய்தி

0 1152

காஞ்சிபுரத்துக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டவர்களை தீவிரவாதிகள் என சமூகவலைதளங்களில் தவறான செய்தி பரப்பியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த வாரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த இஸ்லாமியர்கள் 2 பேரை தீவிரவாதிகள் என்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் சமூகவலைதளங்களில் புகைப்படங்களுடன் செய்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதில், வைரலான புகைப்படங்களில் உள்ளவர்கள் வங்கதேச நாட்டைச் சேர்ந்த கான் மற்றும் அப்துல்லா என்பது தெரியவந்தது.

image

அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக சென்னை வந்த இருவரும், காஞ்சிபுரத்தை சுற்றி பார்க்கச் சென்ற போது காமாட்சி அம்மன் கோவில் அருகே சென்றதும் தற்போது அவர்கள் தங்கள் நாட்டுக்கு திரும்பி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் தீவிரவாதி இல்லை என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments