லெபனானின் பேராசிரியர் ஹசன் டயப் தலைமையில் புதிய அரசு
மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றாக லெபனானின் அரசுக்கு எதிராக நடந்த போராட்டங்களின் விளைவாக புதிய அரசு அமைக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டில் பல ஆண்டுகளாக நிலவும் பொருளாதார நெருக்கடியை சீர்செய்ய வலியுறுத்தி கடந்த அக்டோபர் மாதம் முதல் போராட்டம் நடந்து வருகிறது. இதை தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் நெருக்கடியால் லெபனான் பிரதமர் சாத் ஹரிரி(Saad Hariri) கடந்த அக்டோபர் மாத இறுதியில் பதவி விலகினார்.
இந்த நிலையில் பேராசிரியர் ஹசன் டயப் தலைமையில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 20 பேர் கொண்ட புதிய அமைச்சரவையை அமைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். இருந்த போதும், பொதுதேர்தல் நடத்த வலியுறுத்தியும் பொருளாதார நிபுணர்கள் கொண்ட அமைச்சரவை அமைக்க கோரியும் லெபனானில் போராட்டங்கள் தொடர்கிறது.
Comments