தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 36 பேர் உயிரிழப்பு

0 1189

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புர்கினா பாசோவில்(Burkina Faso)மார்கெட் ஒன்றில் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 36 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அந்நாட்டில், அல்கொய்தா மற்றும் இஸ்லாமிய அரசுகளின் ஆதரவு கொண்ட சில அமைப்புகள், கடந்த சில மாதங்களாக பொதுமக்கள் மற்றும் ராணுவ முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சன்மடெங்கா(Sanmatenga)மாகாணத்தில் அலமவு (Alamou) என்ற இடத்தில் கூட்டம் நிறைந்த சந்தை ஒன்றில் புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்த கட்டுமானங்களுக்கு தீவைத்ததுடன் பொதுமக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் உயிரிழந்த 36 பேருக்கு 2 நாட்கள் நாடு தழுவிய துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments