மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த நபர் பெங்களூரு போலீசாரிடம் சரண்

0 843

மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த நபர் பெங்களூரு போலீசாரிடம் சரணடைந்தார்.

கடந்த திங்கட் கிழமை விமான நிலையத்தின் டிக்கெட் கவுண்டர் அருகே நீண்ட நேரமாக கேட்பாரற்றுக் கிடந்த கருப்பு நிறப்பை ஒன்றை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்ட போது அதில் வெடிகுண்டுகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து ஆள் இல்லாத மைதானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு வெடிகுண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டன. விமான நிலைய சி.சி.டி.வி. காட்சிகளின் படி ஆட்டோவில் வந்து இறங்கிய தொப்பியணிந்த நபர் கருப்புப் பையை வைத்துவிட்டுச் சென்றது தெரியவந்தது. அவரை போலீசார் தேடிவந்த நிலையில் ஆதித்யா ராவ் என்ற அந்த நபர் இன்று காவல் துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில் சரண் அடைந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments