கெஜ்ரிவாலின் வேட்பு மனு தாக்கல் வேண்டுமென்றே காலம் தாழ்த்தப்படவில்லை - தேர்தல் ஆணையம்
டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சி அமைப்பாளருமான அரவிந்த் கெஜரிவாலின் வேட்பு மனு தாக்கல் வேண்டுமென்றே காலம் தாழ்த்தப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
டெல்லி சட்டபேரவைத் தேர்தலில் 3ஆவது முறையாக போட்டியிடும் கெஜ்ரிவால், ஜாம்நகரில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் சுமார் 6 மணி நேரம் காத்திருந்து நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து அவரை காத்திருக்க வைத்து விட்டதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியது.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தேர்தல் அதிகாரி வேண்டுமென்றே காலம் தாழ்த்தவில்லை என்றும், வேட்பாளர்களிடம் இருந்து வேட்பு மனுக்களை பெறுவதற்காக கடைபிடிக்கப்படும் நடைமுறையின்படியே அவர் செயல்பட்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments