ரஜினியின் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு

0 1063

பெரியார் குறித்து ரஜினிகாந்த் சர்ச்சைக்குரிய கருத்து கூறியதால் அவரது இல்லத்தை முற்றுகையிட உள்ளதாக திராவிடர் விடுதலை கழகத்தினர் அறிவித்ததை அடுத்து சென்னையில் உள்ள ரஜினியின் இல்லத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 14ம் தேதி நடைபெற்ற துக்ளக் இதழின் 50வது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்ற ரஜினி பெரியார் குறித்து சர்ச்சை கருத்து கூறியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினியின் கருத்திற்கு பெரியாரிய இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அவரது இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக திராவிடர் விடுதலை கழகத்தினர் அறிவித்தனர். அதையடுத்து, போயஸ்கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்தை சுற்றிலும் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments