வெற்றிகரமாக நடந்த ஷரங் என்ற சிறிய வகை பீரங்கி சோதனை முயற்சி
உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட ஷரங் என்ற சிறிய வகை பீரங்கி சோதனை முயற்சி வெற்றிகரமாக நடந்துள்ளது.
இந்திய ராணுவத்தில் ஷரங் துப்பாக்கி என்ற பெயரில் அழைக்கப்படும் சிறிய வகை பீரங்கி பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட இதன் குழாய் 130 மில்லி மீட்டர் விட்டத்தில் இருந்ததால் சுடும் தூரம் குறைவாக இருந்து வந்தது.
இதையடுத்து இதன் தரத்தை உயர்த்த ராணுவம் முடிவு செய்ததையடுத்து குழாயின் விட்டம் 155 மில்லி மீட்டராக அதிகரிக்கப்பட்டது. மேலும் சில பாகங்களும் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலம் ஜபல்பூரிர் இந்த சோதனை நடத்தப்பட்டது.
அப்போது 39 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கினை ஷரங் குறிதவறாமல் சுட்டு வீழ்த்தியது. இதனைத் தொடர்ந்து மேலும் பல ஷரங் பீரங்கிகளை வாங்கி அதனை மேம்படுத்த ராணுவம் முனைப்புக் காட்டி வருகிறது.
Comments