நடந்து செல்லும் புள்ளிச் சுறா கண்டுபிடிப்பு
ஆஸ்திரேலிய கடல் பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வில், நடக்கும் சுறாவை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சிலர் 12 ஆண்டுகளாக வடக்கு ஆஸ்திரேலியாவுக்கும், இந்தோனேஷியாவுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஆய்வு நடத்தி வந்தனர்.
இந்நிலையில் தற்போது புள்ளிச் சுறா வகையைப் புதிதாக பார்த்துள்ளனர். விஞ்ஞானிகள் பார்த்துக் கொண்டிருக்கும் போது, அந்தச் சுறா தனது பக்கவாட்டுத் துடுப்புகளை தேவைக்கு உபயோகித்து நடந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைக் கண்டு ஆச்சர்யமடைந்த விஞ்ஞானிகள், நடக்கும் புள்ளிச்சுறாவின் வேறு குடும்பங்களைப் பற்றியும் ஆராய்ந்து வருகின்றனர்.
Comments