மன இறுக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய தீபிகா படுகோனுக்கு கிறிஸ்டல் விருது

0 947

மன ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கு ஸ்விஸ் நகரான டாவோசில் கிறிஸ்டல் விருது வழங்கப்பட்டது.

உலகப் பொருளாதார மாநாட்டில், மார்ட்டின் லூதர் கிங்கின் மேற்கோளுடன் தமது பேச்சை உரையைத் தொடங்கினார் தீபிகா
மன நல பாதிப்பு குறித்து பகிரங்கமாக பேட்டியளித்த தீபிகா படுகோன், மும்பையின் பாலிவுட் நட்சத்திரங்களின் வண்ணமயமான வாழ்க்கைக்குப் பின்னால் சூழ்ந்துள்ள மன இருளை வெளிப்படுத்தி பலரை அதிர வைத்தார். 

இதனை தமது பேச்சில் நினைவு கூர்ந்த தீபிகா, மனநோய் குறித்த விழிப்புணர்வு தான் அதிலிருந்து மீள்வதற்கான வழி என்றார்.மனஇறுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒரு உயிரையாவது தம்மால் காப்பாற்ற முடியும் என்றுதான் இதனை வெளிப்படையாக விவாதிக்க தாம் முன்வந்ததாகவும் தீபிகா தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments