நேபாளத்தில் எரிவாயு கசிவின் காரணமாக 8 இந்தியர்கள் மரணம்

0 692

நேபாளத்தில் உள்ள மாக்வான்புர் பகுதியில் நடைபெற்ற எரிவாயு கசிவின் காரணமாக எட்டு இந்தியர்கள் தங்கள் விடுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர்.

பிரவீன் நாயர் என்ற கேரளாவைச் சேர்ந்த டாக்டர் தமது மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினருடன் நேபாள சுற்றுலா வந்ததாக கேரள காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.  அறையில் குளிருக்கு இதமூட்ட கேஸ் ஹீட்டரை அக்குடும்பம் பயன்படுத்தியுள்ளது.

ஆனால் அதில் ஏற்பட்ட மூச்சுத்திணறலால் அவர்கள் இறந்திருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எட்டுபேரின் உடல்களும் விமானம் மூலம் காட்மண்டு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்திய தூதரகத்தின் உதவியுடன் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments