கொடைக்கானலில் தீவிரவாதிகள் ஊடுருவல்?
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளனரா என்பது குறித்து அதிரடிப்படையினர் துப்பாக்கியுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
கொடைக்கானல் ,வட்டக்கனால் ,வெல்லகெவி ,கும்பக்கரை உள்ளிட்ட இடங்களில் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை நடைபெற்று வரும் நிலையில் கேரளாவிலிருந்து கொடைக்கானல் மலைப் பகுதிகள் வழியாக எளிதாக வரக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு இந்த தேடுதல் பணி நடப்பதாக அதிரடிப்படையினர் தெரிவித்தனர். இந்த பணியில் 15க்கும் மேற்பட்ட அதிரடிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Comments