பெண்களை கொத்தி தூக்கும் டிக்டாக் மன்மதன்...! போலீஸ் தேடுகிறது..

0 3061

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே டிக்டாக் மூலம் மயக்கி இளம் பெண்களை கடத்திச்செல்லும் மேரேஜ் மன்மதனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். டிக்டாக்கில் நடக்கின்ற நாடக காதல் பின்னணி குறித்து விவரிக்கிறது.

டிக்டாக்கில் தனக்கு தானே சண்டியர் என பில்டப் கொடுத்து இளம் பெண்களை மயக்கி கொத்தாக தூக்கிச்சென்ற வழக்கில் போலீசாரால் தேடப்படும் காதல் மன்மதன் ராஜசேகர் இவர் தான்..!

 2014 ஆம் ஆண்டு சுகன்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவருடன் குடித்தனம் நடத்தி ஒரு பெண் குழந்தைக்கு தந்தையான நிலையில் தான் மது போதையில் சண்டையிட்டு திரிந்த ராஜசேகர், டிக்டாக் மூலம் பல பெண்களை மயக்கி காதல் வலையில் வீழ்த்தியுள்ளாதாக திடுக்கிடவைக்கிறார் மனைவி சுகன்யா..!

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட ராஜசேகர், தன்னை ஒரு திரை நாயகனாக நினைத்துக் கொண்டு டிக்டாக்கில் செய்த நாடக காதல் வெறித்தனத்திற்கு பல டிக்டாக் ஏமாளி பெண்கள் சிக்கி உள்ளதாக குற்றஞ்சாட்டுகிறார் மனைவி சுகன்யா..

இந்த நிலையில் ராஜசேகரை தேடி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காவல்துறையினர் சுகன்யாவின் வீட்டுக்கு சென்றுள்ளனர். அறந்தாங்கி ஜவுளிக்கடை ஒன்றில் வேலைபார்த்து வந்த கவிநயா என்ற பெண்ணை டிக்டாக்கில் மயக்கிய மன்மதன் ராஜசேகர், வீட்டில் இருந்து அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டதாக கூறி அதிர வைத்துள்ளனர்

ஏற்கனவே தனது கணவர் டிக்டாக் மூலமாக தன்னை சிங்கிள் என கூறிக்கொண்டு பல பெண்களுடன் மிங்கிள் ஆவதாக பண்ருட்டி காடாம்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் அங்குள்ள போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்த நிலையில் ராஜசேகர், தற்போது புதிதாக ஒரு பெண்ணை தூக்கி சென்றுள்ளதாக ஆதங்கம் கொள்கிறார் சுகன்யா

இந்த நிலையில் டிக்டாக்கை தடை செய்ய கோரியும், தனக்கும் குழந்தைக்கும் உரிய பாதுகப்பு அளிக்க கோரியும் காவல் கண்காணிப்பாளர் அபினவ்விடம் புகார் அளித்துள்ளார் சுகன்யா.

டிக் டாக்கில் ராஜசேகரை போன்ற மன்மதர்களை நம்பி வாழ்க்கையை பறிகொடுத்த பல இளம் பெண்கள் வெளியில் சொல்ல இயலாமல் தவித்து வரும் நிலையில் டிக்டாக் என்னும் வாழ்க்கைக் கொல்லி இன்னும் பல குடும்பங்களை சீரழிக்க காத்திருக்கிறது அதனிடம் இருந்து நம்மை தற்காத்து கொள்வது அவசியம் என்பதை சுட்டிக்காட்டுகின்றது இந்த சம்பவம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments