6 மணி நேரம் காத்திருந்து வேட்பு மனு தாக்கல் செய்த அரவிந்த் கெஜ்ரிவால்

0 1018

சுமார் 6 மணி நேரம் காத்திருந்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான தமது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

புதுடெல்லி தொகுதியில் போட்டியிடும் கெஜ்ரிவாலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி ரோமேஷ் சபர்வாலை நிறுத்தியுள்ளது. இத்தொகுதியில் பாஜக வேட்பாளராக சுனில் யாதவ் போட்டியிடுகிறார். மும்முனைப் போட்டி இருந்த போதும் இத்தொகுதியில் மூன்றாவது முறை வெற்றிபெறும் நம்பிக்கையுடன் இருப்பதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். நேற்று அவர் தேர்தல் அதிகாரியிடம் மனு தாக்கல் செய்ய வந்த போது 35 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யக் காத்திருந்தனர்.

ஆனால் அவர்களிடம் தேவையான ஆவணங்கள் இல்லாததால் பலமணி நேரமாக இழுபறி நீடித்தது. இதனால் கெஜ்ரிவால் 6 மணி நேரம் காத்திருக்க நேர்ந்தது. முறையாக ஆவணங்களை அவர்கள் வைத்திருக்கா விட்டாலும் தாங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்யும் வரை, கெஜ்ரிவால் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்க முடியாது என பிடிவாதம் பிடித்தனர்.

இவர்களுக்கு பின்னால் பாஜக இருப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் சவுரப் பரத்வாஜ் குற்றம் சாட்டியுள்ளார். நிகழ்வு குறித்து பேசிய மனிஷ் சிசோடியா, வேண்டுமென்றே திட்டமிட்டு கெஜ்ரிவாலின் வேட்பு மனு தாக்கலை பாஜக தாமதப்படுத்துவதாக சாடினார்.

தேர்தல் ஆணையமும் தேவையே இல்லாமல் ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் அரை மணி நேரத்திற்கும் மேல் எடுத்து கொள்வதாக கூறினார். ஆனால் காத்திருப்பு குறித்து பதில் அளித்த கெஜ்ரிவால், வேட்பாளர்களில் பலர் முதல் முறை வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். எனவே தவறு நிகழ்வது சகஜம் தான். பரவாயில்லை என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments