ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் தமிழக வீரர் தோல்வி

0 1212

ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டியில் தமிழக வீரர் குணேஸ்வரன் தொடக்க சுற்றிலேயே தோல்வி அடைந்தார். கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் தொடங்கி உள்ளது.

இதில் உலகின் 2-ம் நிலை வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவா முதல் சுற்று ஆட்டத்தில் கிறிஸ்டினாவை எதிர்கொண்டார். இதில் பிளிஸ்கோவா 6-1, 7-5 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில் 6-ம் நிலை வீராங்கனையான பெலிண்டாபென்சிக் 6-3, 7-5 என்ற நேர்செட் கணக்கில் அனாகரோலினாவை தோற்கடித்தார். முன்னணி வீரர்களில் ஒருவரான சிலிச் தொடக்க சுற்றில் 6-3, 6-2, 6-4 என்ற நேர்செட் கணக்கில் மவுட் டெட்டை தோற்கடித்தார்.

தமிழக வீரர் குணேஸ்வரன் தொடக்க சுற்றிலேயே தோல்வி அடைந்தார். அவர் 4-6, 2-6, 2-7 என்ற கணக்கில் இடோவிடம் தோல்வி அடைந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments