நித்தியானந்தாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

0 1770

நித்தியானந்தாவுக்கு எதிராக, குஜராத் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

நித்தியானந்தா, தன் இரு மகள்களை, சட்ட விரோதமாக குஜராத் மாநிலம், அகமதாபாதில் உள்ள ஆசிரமத்தில் அடைத்து வைத்துள்ளதாக ஜனார்த்தன சர்மா என்பவர், போலீசில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக, கடந்த நவம்பரில், குஜராத் போலீசார், முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தனர். இதையடுத்து, நித்தியானந்தா தப்பியோடி, ரகசிய இடத்தில் தலைமறைவானார். இதற்கிடையே, கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண்கள், தங்கள் தந்தை கூறிய குற்றச்சாட்டை மறுத்தனர்.

இந்நிலையில், ஜனார்த்தன சர்மாவின் புகார் அடிப்படையில், ரகசியமாக கடத்திச் சென்று, அடைத்து வைத்தல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ், குஜராத் போலீசார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments