அரசு மருத்துவமனைகளில் பயோ மெட்ரிக்கை நடைமுறைப்படுத்த 3 மாதம் அவகாசம்

0 825

அரசு மருத்துவமனைகளில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவிற்கான அரசாணையை நடைமுறைப்படுத்த, அரசுக்கு 3 மாதம் கால அவகாசம் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், கடந்த 2017-ல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பயோ மெட்ரிக் வருகைப்பதிவிற்கான அரசாணையை, 4 மாதத்தில் முழுமையாக நடைமுறைப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் இந்த உத்தரவு முறையாக செயல்படுத்தப்படவில்லை என்பதால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

மனுவின் விசாரணையின் போது, அரசு தரப்பில் உத்தரவை நடைமுறைப்படுத்த 6 மாத கால கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. அதையேற்க மறுத்த நீதிமன்றம் 3 மாதத்திற்குள் உத்தரவை நடைமுறைப்படுத்தி, அது தொடர்பாக ஏப்ரல் 24ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments