கடும் பனிப்பொழிவு - வெண்பனி போர்த்திய சூழல்

0 1345

இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக சாலைகள் கட்டிடங்கள் மரங்களில் வெண்பனி போர்த்திக் காணப்படுகிறது.

சிம்லா, மணாலி, குஃப்ரி, டல்ஹவுசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக வெப்ப நிலை பூஜ்யம் டிகிரியை ஒட்டியே பதிவான நிலையில் மக்கள் குளிரால் நடுங்கி வருகின்றனர்.

இந்நிலையில் சிம்லா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து வரும் பனிப்பொழிவு காரணமாக மரங்கள், கட்டிடங்கள் உள்ளிட்ட இடங்களில் பனி போர்த்திக் காணப்படுகிறது. சாலைகளில் சில அங்குல அளவுக்கு பனி படர்ந்துள்ள நிலையில் அவற்றை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments