சென்னை புத்தகக் கண்காட்சி நிறைவு
சென்னை புத்தக கண்காட்சியில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
பபாசி எனப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், 43-வது சென்னை புத்தகக் கண்காட்சியை, கடந்த 9ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.
800 அரங்குகளில், கோடிக்கணக்கான புகத்தகங்கள் இடம்பெற்றன. கடந்த 13 நாட்களில், 13 லட்சம் வாசகர்கள் வருகை தந்ததாகவும், 20 கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யபட்டுள்ளதாகவும் பபாசி தெரிவித்துள்ளது.
புத்தகக் கண்காட்சியின் நிறைவு நாள் நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்று, பதிப்புத்துறையில் 25 ஆண்டுகள் சேவைபுரிந்த 20 பதிப்பாளர்களுக்கு விருது வழங்கினார்.
Comments