பேரறிவாளன் வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு..

0 590

பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை குறித்து பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உள்ளிட்ட 16 பேர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தனது தண்டனையை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் இதுபற்றி 2 வாரத்தில் தமிழக அரசு பதில் அளிக்கும்படி உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments