இந்திய கிரிக்கெட் அணி ஒரு "PowerHouse"-ஆக திகழ்கிறது.. நியூசி., முன்னாள் ஆல்ரவுண்டர் பாராட்டு
அனைத்து வகை கிரிக்கெட்டிலும் சக்தி வாய்ந்த, வலிமையான அணியாக உள்ளது என இந்திய கிரிக்கெட் அணியை, நியூசிலாந்து அணி முன்னாள் அதிரடி வீரர் கிரேக் மெக்மில்லன் பாராட்டியுள்ளார்.
Radio Sport வானொலியின் Breakfast நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய கிரேக் மெக்மில்லன், இந்திய அணியை சக்தி வாய்ந்த அணி என பாராட்ட PowerHouse என்ற வார்த்தையை பயன்படுத்தினார். நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி, அங்கு ஐந்து டி20, மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க உள்ளது.
இதில் முதல் டி20 போட்டி வரும் வெள்ளிக்கிழமை துவங்க உள்ளது. இதனிடையே நடைபெற உள்ள 3 வடிவ கிரிக்கெட் தொடர்களில், குறைந்தபட்சம் 2 தொடர்களையாவது நியூசிலாந்து அணி கைப்பற்றினால் மட்டுமே பாஸ்மார்க் வாங்கியதாக அர்த்தம் என கூறியுள்ளார் கிரேக் மெக்மில்லன்.
அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் டி20 உலககோப்பை போட்டி நடைபெற உள்ளது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை வெல்ல வேண்டுமெனில், தற்போது இந்தியாவிற்கு எதிராக நடைபெற உள்ள 5 போட்டிகள் அடங்கிய டி20 தொடரை நியூசிலாந்து கைப்பற்றுவது மிகமுக்கியம் என கூறியுள்ளர் கிரேக் மெக்மில்லன்.
Comments