இன்டர்போல் முன்னாள் தலைவருக்கு பதிமூன்றரை ஆண்டு சிறை

0 949

லஞ்ச ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோக வழக்குகளில் சிக்கிய இன்டர்போல் முன்னாள் தலைவர் மெங் ஹோங்வி-க்கு (Meng Hongwei) சீன நீதிமன்றம் பதிமூன்றரை ஆண்டு கால சிறைத் தண்டனை விதித்துள்ளது.

சீனாவில் பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் மற்றும் கடலோர காவல் படை தலைவராக இருந்த இவர் பிரான்சை தலைமையகமாக கொண்ட சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போலின் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் கடந்த 2018 ஆம் ஆண்டு தமது பதவியை ராஜினாமா செய்தார்.

விசாரணையில், அவர், தமது பதவியை பயன்படுத்தி கோடி கோடியாக பணம் சம்பாதித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து சிறையில் அடைக்கப்பட்ட அவர் தாம் லஞ்சம் வாங்கியதை ஒப்புக் கொண்டார்.

இந்த வழக்கில் டியான்ஜின் நகர நீதிமன்றத்தில் இன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில் அவருக்கு பதிமூன்றரை வருட சிறைத் தண்டனையும், 2 லட்சத்து 90 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments