வேலையின்மை - எச்சரிக்கும் ஐ.நா அமைப்பு
உலகளவில், 47 கோடி பேர் வேலையை இழந்து தவிப்பதாக, ஐ.நா சர்வதேச தொழிலாளர் நல அமைப்பு கவலை வெளியிட்டிருக்கிறது. ஆனால், அதேவேளையில், வேலையின்மை விகிதம், கடந்தாண்டை விட, இந்தாண்டு பெரியளவில் மாற்றமின்றி, 5 புள்ளி 4 விழுக்காடாகவே தொடர்வதாகவும், தெரிவித்திருக்கிறது.
மெதுவாக வளரும் பொருளாதாரங்களின் காரணமாகவே, வேலையின்மை அதிகரிப்பதாகவும், மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை என்றும், ஐ.நா சர்வதேச தொழிலாளர் நல அமைப்பு கூறியிருக்கிறது. 47 கோடி பேர் வேலையிழந்திருப்பது முற்றாக தவிர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் ஐ.நா.வின் சர்வதேச தொழிலாளர் நல அமைப்பு, வேலைவாய்ப்பின்மை அதிகரித்தால், அதுவே, போராட்டம், வன்முறை போன்ற சமூக அமைதியின்மைக்கு வித்திடக்கூடும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.
Comments