பனிக்கட்டிகளால் ஆன கார் சிற்பம்... ஆர்வமுடன் காணும் மக்கள்

0 1026

ஜம்மு - காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவி வரும் சூழலில், ஸ்ரீநகரை சேர்ந்த இளைஞர் ஒருவர் பனிக்கட்டிகளை பயன்படுத்தி உருவாக்கியுள்ள கார் உருவம் பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.

ஸ்ரீநகரில் கார்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் விற்பனை செய்து வரும் சுபைர் அகமது என்ற இளைஞர் தான் இந்த பனிச்சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.

அதனை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர்களிலிருந்து வரும் சுற்றுலாப்பயணிகளும் ஆர்வமுடன் பார்த்து ரசிப்பதோடு, புகைப்படமும் எடுத்து செல்கின்றனர்.

கார் மட்டுமின்றி, தாஜ் மகால் போன்றவற்றையும் தன்னால் பனிக்கட்டிகளை வைத்து உருவாக்க முடியும் எனக்கூறும் சுபைர், சிறுவயது முதலே இது போன்ற சிற்பங்களை செய்வதில் ஆர்வம் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments