ரஜினி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரி வழக்கு

0 737

தந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துகளை பரப்புவதாக நடிகர் ரஜினிகாந்த் மீது அளிக்கப்பட்ட புகாரில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பெரியார் குறித்து பொய்யான தகவலை பரப்பி களங்கம் ஏற்படுத்தும் நோக்குடன் ரஜினி வதந்தி பரப்புவதாக திராவிட விடுதலை கழகத்தின் மனுவில் கூறப்பட்டுள்ளது.

ரஜினி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகவும், ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்குப் பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிடுமாறும் கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments