முதுகலை வேதியியல் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமன வழக்கில் புது தேர்வு பட்டியலை தயாரிக்க உத்தரவு

0 1216

முதுகலை வேதியியல் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் தொடர்பாக புது தேர்வு பட்டியலை தயாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக பள்ளி கல்வி துறையில் காலியாக உள்ள 356 முதுகலை வேதியியல் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு நடந்த தேர்வில், அதிக மதிப்பெண் பெற்றவர்களை பொது பிரிவில் சேர்க்காமல், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினருக்கான இட ஒதுக்கீட்டில் நியமித்து தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தற்காலிக தேர்வு பட்டியலை ரத்து செய்யவும் மனுதாரர்கள் கோரியிருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணையில், புதிய தேர்வு பட்டியலை இரண்டு வாரங்களுக்குள் தயாரிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் பின்னடைவு காலி பணியிடங்களை முதலில் நிரப்பியப்பின் தற்போதைய பணியிடங்களை நிரப்பவும் ஆணையிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments