வளர்ந்த நாடுகளில் ஒன்றான கனடாவில் பசியால் 40 லட்சம் பேர் பாதிப்பு

0 1302

பணக்கார நாடுகளில் ஒன்றான கனடாவில் பசியால் பலர் நோய்வாய்பட்டுள்ளதாகவும் தற்கொலை செய்துகொள்வதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அந்நாட்டில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சராசரி உணவுக்காக அன்றாடம் போராடுவதாக கனடா மருத்துவ சங்க இதழ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

கனடாவில் தொற்றுநோய்கள், விபத்துகள், தற்கொலைகள் உள்ளிட்டவை இருமடங்காக அதிகரித்துள்ளதற்கும் உணவு பற்றாக்குறையே காரணம் என்று குறிப்பிட்டுள்ளது.

கனடா நாட்டு மக்கள் ஏராளமானோர் ஆரோக்கியமான உணவை போதுமான அளவு எடுத்துக் கொள்ளாத காரணத்தால் உளவியல் ரீதியான துயரத்துக்கு உள்ளாவதாகவும் ஆய்வறிக்கை தகவல்கள் கூறுகின்றன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments