கம்பம் பள்ளத்தாக்கில் 2ஆம் போக நெல் சாகுபடி பணிகள் தொடக்கம்

0 1411

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் இரண்டாம் போக நெல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி தேனி மற்றும் உத்தமபாளையம் வட்டங்களில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் இருபோக நெல் விவசாயம் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு தொடக்கத்தில் அணையின் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டதால் ஜூனில் தொடங்க வேண்டிய முதல்போக சாகுபடி சற்று தாமதமாக ஆகஸ்டில் தொடங்கியது.

image

கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் அறுவடை பணிகள் முழு அளவில் நிறைவடையவுள்ள நிலையில், 2ஆம் போக சாகுபடிக்கு நிலங்களை உழுது சமன் செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். 2ஆம் போக அறுவடை முடியும்வரை அணையின் நீர்மட்டம் கைகொடுக்கும் என அவர்கள் நம்புகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments