சாலை விதிகளை மீறுபவர்கள் ஆட்டோமேடிக் கேமரா மூலம் கண்காணிப்பு

0 924

செங்கல்பட்டு முதல் திருச்சி வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்து ஏற்படும் பகுதியாக இருப்பதால் அங்கு ஆட்டோமேடிக் கேமரா பொறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கிய 31வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சாலை விதிகளை மீறுவோருக்கான அபராத தொகையை மேலும் குறைக்க பரிசீலித்து வருவதாக தெரிவித்தார்.

மேலும், சாலை விபத்துகளை குறைக்க முதற்கட்டமாக செங்கல்பட்டு முதல் திருச்சி வரை வரை ஆட்டோமேடிக் கேமரா பொருத்தப்பட்டு வருவதாகவும், அதன் மூலம் சாலை விதிகளை மீறுவோர் கண்காணிக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments