அனைத்து இந்திய விளையாட்டு ஆணையத்தின் ஆலோசகர் குழுவிலிருந்து சச்சின்,விஸ்வநாதன் ஆனந்த் விடுவிப்பு
அனைத்து இந்திய விளையாட்டு ஆணையத்தின் ஆலோசகர் குழுவிலிருந்து சச்சின் மற்றும் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சர்பானந்தா சோனோவால் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த போது, விளையாட்டை மேம்படுத்தும் விதமாக இந்த ஆணையம் நிறுவப்பட்டது. அதற்காக அமைக்கப்பட்ட ஆலோசகர் குழு 2015ம் ஆண்டு டிசம்பர் முதல் செயல்பட்ட நிலையில், கடந்த ஆண்டு மே மாதத்துடன் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்தது.
பின்னர் குழுவின் உறுப்பினர்கள் 27லிருந்து 18ஆக குறைக்கப்பட்டு, மாநிலங்களவை உறுப்பினரான சச்சின் மற்றும் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் இந்த குழுவிலிருந்து அவர்களிருவரும் விலக்கப்பட்டு, புதிய உறுப்பினர்களாக கிரிக்கெட் வீரர்கள் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், ஹர்பஜன் சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Comments