பாகிஸ்தானுடன் தற்போது போர் வருமா என்பது கணிப்பது கடினம்

0 915

பாகிஸ்தானுடன் தற்போது போர் வருமா என்பது கணிப்பது கடினம் என்றும், அதே சமயம் போர் எப்போது வந்தாலும் ராணுவம் தயார் நிலையில் இருப்பதாக முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் கூறினார்.

தஞ்சை விமான படைத்தளத்தில் 6 சுகோய் போர் விமானங்கள், பிரம்மோஸ் ஏவுகணைகளுடன் இணைக்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராவத், பாதுகாப்பு நோக்கில் கடலில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவதற்கு ஒவ்வொரு நாட்டுக்கும் சுதந்திரம் இருப்பதாகவும், வணிக இயக்கம் நடைபெறும் கடல் வழியில் கொள்ளையர்களின் ஆதிக்கத்தைத் தடுப்பதற்காகக் கண்காணிப்பு செலுத்துவது இயல்பானது தான் என கூறினார். இந்திய பெருங்கடல் பகுதியில் சீன ராணுவம் நிலை கொண்டிருப்பது, நம் நாட்டுக்குச் சவாலாக இருக்குமா என்ற கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments