இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 4.8 சதவீதமாக இருக்கும் - முன்னர் கணிக்கப்பட்டதைவிட குறைவு
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.8 விழுக்காடாக இருக்கும் என சர்வதேச செலாவணி நிதியம் கூறியுள்ளது.
ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்று வரும் நிலையில், பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீட்டை ஐஎம்எஃப் வெளியிட்டது. அதில், நடப்பு நிதியாண்டில் உலகின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2.9 விழுக்காடாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இது ஏற்கனவே கணிக்கப்பட்டிருந்ததை விட குறைவானதாகும், இதேபோல், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் நடப்பு நிதியாண்டில் 4.8 விழுக்காடாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த வளர்ச்சி விகிதம் 6.1 விழுக்காடாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்த நிலையில் தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
Comments