உலக சாதனை நிகழ்ச்சியாக அதிக இரட்டையர்கள் கூடிய நிகழ்வு

0 926

இலங்கையில் அதிக இரட்டையர்கள் கூடி உலக சாதனை படைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

தலைநகர் கொழும்புவில் உள்ள வெளிப்புற விளையாட்டு மைதானத்தில் இதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான இரட்டையர்கள், மூவர்கள் பங்கேற்றதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் பங்கேற்றவர்களை எண்ணும் பணி நடந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர்கள், எண்ணிக்கையையும் அதற்கான ஆவணங்களையும் கின்னஸ் அமைப்பிடம் சமர்ப்பிக்க இருப்பதாகக் குறிப்பிட்டனர். ஆனால் இந்த முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா என்பது குறித்து கின்னஸ் நிறுவனம் பதிலளிக்கவில்லை.

image

முன்னதாக தைவான் நாட்டில் கடந்த 1999ம் ஆண்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் 3 ஆயிரத்து 961 ஜோடி இரட்டையர்கள், 37 ஜோடி மூவர்கள் மற்றும் 4 ஜோடி நால்வர்கள் பங்கேற்றது உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments