ஈராக்கில் அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து 3 ராக்கெட் குண்டுகள் வீச்சு
ஈராக்கில் அமெரிக்கத் தூதரகம் அருகே 3 ராக்கெட் குண்டுகள் வெடித்துச் சிதறியதாக ஏஎஃப்பி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் கடந்த சில வாரங்களாக நடந்து வரும் மோதல் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. ஈரானின் தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் அமெரிக்க வீரர்களைக் குறிவைத்து ஏற்கனவே இருமுறை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அருகே 3 ராக்கெட் குண்டுகள் விழுந்ததாக ஏஎஃப்பி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில் இரு குண்டுகள் உள்ளூர் நேரப்படி அதிகாலை ஒரு மணியளவில் தூதரகத்தின் பசுமை மண்டலத்தில் விழுந்ததாகவும், மற்றொரு குண்டு டைகிரிஸ் நதிப்படுகையில் விழுந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு பெற்ற துணை ராணுவப்படையினரே காரணம் என அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது.
Comments