வயதான தோற்றம் கொண்ட 15 வயது சிறுமியின் முகம் அறுவை சிகிச்சைக்குப் பின் புதிய தோற்றம்...!
சீனாவில் வயதான தோற்றம் கொண்ட 15 வயது சிறுமியின் முகம் அறுவை சிகிச்சைக்குப் பின் புதிய பொலிவுடன் காட்சியளிக்கிறது.
ஸியோ ஃபெங் என்ற அந்த மாணவி, மரபு வழி நோயால் பாதிக்கப்பட்டு வயதானது போல் தோற்றம் கொண்டிருந்தார். இதனால் பள்ளியிலும் தான் குடியிருக்கும் பகுதியிலும் அக்கம்பக்கத்தவரின் கேலி கிண்டலுக்கு ஆளானார்.
இதனைக் கண்ட பள்ளி ஆசிரியர்கள் ஒன்றிணைந்து அங்குமிங்குமாக திரட்டி இந்திய மதிப்பில் 51 லட்சம் ரூபாய் பணம் வசூலித்து சிறுமியின் மருத்துவத்திற்கு உதவினர். இதையடுத்து சிறுமிக்கு முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. பின்னர் புதிய பொலிவுடன் கூடிய ஸியொ ஃபெங் அனைவருக்கும் மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டார்.
அப்போது, அவரது நண்பர்களும், உறவினர்களும் மகிழ்ச்சிப் பெருக்கில் கரகோஷம் எழுப்பினர். இதனைக் கண்ட அந்தச் சிறுமியின் பெற்றோர் அவரைக் கட்டிப்பிடித்து கண்ணீர் வடித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Comments