உள்ளாட்சி தேர்தல் - மறுவாக்கு எண்ணிக்கை கோரி தொடரப்பட்ட வழக்குகள் முடித்துவைப்பு

0 795

வாக்கு எண்ணிக்கை முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டால், தேர்தல் வழக்கு தான் தொடர முடியும் என்று உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகளில், சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், மறு வாக்கு எண்ணிக்கை கோரி தொடரப்பட்ட வழக்குகள் மீது விசாரணை நடைபெற்றது. அப்போது, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போதே, மறு வாக்கு எண்ணிக்கை கோரி மனு அளித்திருந்தால் மட்டுமே அந்த மனு தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டிருந்தால், தேர்தல் வழக்கு தான் தொடர முடியும் என்றும், மறுவாக்கு எண்ணிக்கை கோரி தொடரப்பட்ட வழக்குகளை விசாரிக்க முடியாது என்றும் கூறி, அந்த வழக்குகளை முடித்து வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments