பாலாற்றில் அதிகளவில் உபரி நீரை சேகரிக்க ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்த புதிய தடுப்பனை திட்டம்
பாலாற்றின் குறுக்கே சென்னை ஐஐடி உதவியால் கட்டப்பட்ட தடுப்பணையால் நீராதாரம் உயர்ந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வாயலூர் அருகே கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் சமூக பங்களிப்பு நிதி உதவியின் கீழ் பாலாற்றில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. கடலுக்கு அருகில் அமைந்துள்ளதால் அந்த கிராமத்தில் கடல் நீர் ஊடுருவும் வாய்ப்பு உள்ளதை அடுத்து, தடுப்பணையை ஐ.ஐ.டி. பொறியாளர்கள் நிலத்தடி தடுப்புச்சுவருடன் கட்ட திட்டமிட்டனர்.
இதன்படி நிலத்திற்கு அடியில் 8 மீட்டர் ஆழத்தில் சுவருடன் கூடிய தடுப்பணை 32.5 கோடி ரூபாய் செலவில் 6 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டது.
தற்போது பெய்த மழையால் அங்கு நீர் நிரம்பி உள்ளதோடு, கடல் நீரும் உட்புகாமல் தடுக்கப்பட்டதால் நீராதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
Comments