சிறுநீர் பாதையில் கோளாறு - இடுப்பு துவாரம் வழியே சிறுநீரை வெளியேற்றும் சிறுவன்

0 1695

கரூரில் தாயை இழந்து, மனநிலை பாதிக்கப்பட்ட தந்தையுடன் வசித்து வரும் 10 வயது சிறுவன், தனக்குள்ள சிறுநீர்ப் பாதை பிரச்சனைக்கான சிகிச்சைக்கு உதவி கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

மேட்டு திருக்காம்புலியூரைச் சேர்ந்த பிரசன்ன வெங்கடேஷ் என்ற அந்த சிறுவனுக்கு பிறக்கும்போதே சிறுநீர் பாதையில் கோளாறு இருந்துள்ளது.

இதனையடுத்து தற்காலிகமாக அவனது இடுப்புப் பகுதியில் துவாரம் ஏற்படுத்தி சிறுநீர் செல்ல மருத்துவர்கள் வழியேற்படுத்தியுள்ளனர். பெரியவன் ஆனதும் மீண்டும் அறுவை சிகிச்சை செய்து, இயல்பாக சிறுநீர் கழிக்குமாறு செய்துவிடலாம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். பிரசன்னாவின் நிலையை அறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அனுப்பிவைத்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments