அமைச்சரவைக் கூட்டம்: பட்ஜெட், நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசனை?

0 1432

தமிழக அமைச்சரவை கூட்டம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னையில் நடைபெற்றது.

நடப்பு ஆண்டில் முதல் முறையாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன், ஜெயக்குமார், உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு பற்றியும், அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக, தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments