பயங்கரவாதிகளுக்கு உதவியதாக கைதான 3 நபர்கள் சிறையில் அடைப்பு
பயங்கரவாதிகளுக்கு, போலி ஆவணம் மூலம் சிம்கார்டு வாங்கி கொடுத்ததாக கைதான 3 நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில், சிறையில் அடைக்கப்பட்டனர்.
பெங்களூரில் கடந்த 8 ம் தேதி முகமது அனீப்கான், இம்ரன் கான், முகம்மது சையது ஆகிய மூன்று நபர்களை தமிழக கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்தனர்.
பயங்கரவாதி காஜா மைதீன் மற்றும் கூட்டாளிகளுக்கு சிம்கார்டுகள் வாங்கிக் கொடுத்ததாகவும், போலி பாஸ்போர்ட் தயாரித்து காஜா மைதீன் தப்ப உதவியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டிய போலீசார், 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
இன்றுடன் காவல் முடிந்ததால் மூவரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வரும் 3 ம் தேதி வரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதையடுத்து மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Comments