ஏரி தூர்வாரும் வழக்கில் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

0 806

பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தை தூர்வார எடுத்த நடவடிக்கைகள் குறித்து, வரும் பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

image

இது தொடர்பான வழக்கு இன்று நீதிபதிகள் வினித் கோத்தாரி, கிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஏரியில் தொழிற்சாலை கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்காததுடன்,  ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க அரசு தவறியதால், அதன் பரப்பு சுருங்கி, சுற்றுச்சூழலும், மீனவர்களின் வாழ்வாதாரமும்  பாதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதுபற்றி வரும் பிப்ரவரி மாதம் 5ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தவறினால் நேரில்  ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments